உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மொபைல் போன் திருடர்கள் நால்வர் கைது

மொபைல் போன் திருடர்கள் நால்வர் கைது

வியாசர்பாடி: வியாசர்பாடியில் மொபைல் போன் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி, மேயர் கிருஷ்ணமூர்த்தி 2வது தெருவைச் சேர்ந்தவர் ராமஜெயம், 54; இவர், செங்குன்றத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று வியாசர்பாடி, அம்பேத்கர் கல்லுாரி சாலை வழியாக வீட்டிற்கு நடந்து வந்த போது, அவ்வழியே பின்புறம் வந்த மர்ம நபர்கள், சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல்போனை திருடி தப்பினர். இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரித்தனர். இதில், வியாசர்பாடி, சாமந்திப்பூ காலனியைச் சேர்ந்த கரண், 18, கல்யாணபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ், 20, தினகரன், 21 அயப்பாக்கத்தைச் சேர்ந்த டேப்லின், 21, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் நான்கு பேரையும் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி