1.5 கிலோ கஞ்சா வைத்திருந்த சிறுவன் உட்பட நால்வர் கைது
அயனாவரம், நியூ ஆவடி சாலையில், இரவு நேரத்தில், 1.5 கிலோ கஞ்சாவுடன் நின்ற சிறுவன் உட்பட நால்வரை, போலீசார் கைது செய்தனர். அயனாவரம், நியூ ஆவடி சாலையில் கஞ்சா விற்கப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் போலீசார் கண்காணித்து, இருசக்கர வாகனத்தில் நின்ற நபர்களை சோதித்தனர். அப்போது அவர்கள், 1.5 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருப்பது தெரிந்தது. விசாரணையில், அயனாவரம், சோலையம்மாள் தெருவை சேர்ந்த கிருபானந்தம், 22, கோகுல், 25, ஆதிஹரிஷ், 19, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர், இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்து சிறையிலும், சிறுவனை சீர்த்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.