மேலும் செய்திகள்
மத்திய அரசு அலுவலக அணி காவல் ஹேக்கத்தானில் வெற்றி
4 hour(s) ago
போதைக்கு எதிராக மாணவியர் விழிப்புணர்வு
4 hour(s) ago
ஜதியில் ஜொலித்த சஹானா
4 hour(s) ago
நாசாவின் சர்வதேச போட்டியில் ஈஸ்வரி கல்லுாரி சாதனை
4 hour(s) ago
சென்னை, சென்னையில் உள்ள போட்டித் தேர்வு இலவச பயிற்சி மையங்களில், பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள, சர் தியாகராய கல்லுாரியில், 500 இடங்களிலும், சேப்பாக்கம் மாநிலக்கல்லுாரி வளாகத்தில், 300 இடங்களிலும் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.இப்பயிற்சியில் சேர விரும்புவோருக்கு, இணையவழியில் விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடக்க உள்ளது.பயிற்சி வகுப்புகள் மதியம் 2:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, ஆறு மாதம், வாராந்திர வேலை நாட்களில் நடக்க உள்ளது.இதில் சேர விரும்புவோர், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, ஏப்., 1 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில், உணவு, தங்கும் வசதிகள் இல்லை. www.cecc.inஎன்ற தளத்தின் வழியாக, நாளை முதல் பிப்., 12 வரை விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விபரங்களுக்கு, 044 - 2595 4905, 2851 0537 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள, இனவாரியான இடங்களுக்கு ஏற்ப, தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் விபரம் இணையதளத்தில் வெளியிடப்படும். மார்ச் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago