உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தலைமறைவு குற்றவாளி கைது

 தலைமறைவு குற்றவாளி கைது

கிண்டி: ஜாமினில் வெளிவந்து தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர். துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர், 32. கிண்டி சிட்கோ வளாகத்தில் கூலி வேலை செய்தார். அதே பகுதியை சேர்ந்த வீரபத்திரன், 40. இருவருக்கும் ஏற்பட்ட முன்விரோதத்தில், 2002ம் ஆண்டு வீரபத்திரன், சங்கரை கொலை செய்தார். கிண்டி போலீசார், வீரபத்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளிவந்த இவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். கிண்டி போலீசார் விசாரணையில், விருதுநகரில் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. நேற்று, வீரபத்திரனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை