மேலும் செய்திகள்
திருட்டு வழக்கில் 5 ஆண்டு தலைமறைவானவர் கைது
02-Oct-2026
முத்தியால்பேட்டை: வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த 42 வயது நபர், பெங்களூரில் கைது செய்யப்பட்டார். முத்தியால்பேட்டை, மலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் அபூபக்கர், 47. இவர், அதே பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். கடந்த மாதம் 29ம் தேதி, இவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த, 23 சவரன் நகைகள், 2.50 லட்சம் ரூபாய் திருடு போனது. இது குறித்து விசாரித்த முத்தியால்பேட்டை போலீசார், திருட்டில் ஈடுபட்ட ரமேஷ், 63, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில், பெங்களூரில் தலைமறைவாக இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ஈஸ்வர், 42, என்பவரை, கைது செய்த போலீசார், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
02-Oct-2026