காந்தி சில்க் பஜார் கண்காட்சி துவக்கம்
சென்னை :தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு வாரியம் சார்பில், 'காந்தி சில்ப் பஜார்' என்ற மாநில அளவிலான கைவினை பொருட்கள் கண்காட்சி, நுங்கம்பாக்கத்தில் நேற்று துவங்கியது. கண்காட்சியை துவக்கி வைத்த, அமைச்சர் அன்பரசன்,''நான்கு ஆண்டுகளில், பூம்புகார் நிறுவனம் 186.30 கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்துள்ளது,'' என்றார். கண்காட்சியில், பஞ்சலோக சிலைகள், மாமல்லபுரம் கற்சிற்பங்கள், தம்மம்பட்டி மரச்சிற்பங்கள், நாச்சியார் கோவில் விளக்குகள் இடம் பெற்றுள்ளது. வாரணாசி உள்ளிட்ட பிற மாநில கலைப் பொருட்கள் என, 70 அரங்குகளில் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சி வரும் 17 ம் தேதி வரை நடக்க உள்ளது. **