உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது

காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது

மணிமங்கலம் மணிமங்கலத்தில் காதல் ஜோடியை மிரட்டி, பணம் பறித்த கும்பலை, போலீசார் கைது செய்தனர். வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன், 23. இவரும், படப்பை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்துள்ளனர். கடந்த 22ம் தேதி மணிமங்கலம் அருகே வயல்வெளி பகுதியில் சந்தித்து, இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஆறு பேர் கும்பல், விக்னேஸ்வரனை தாக்கி, அவரது மொபைல் போனில் உள்ள 'ஆன்லைன்' பணப்பரிமாற்ற செயலியான 'ஜிபே' மூலம் 18,000 ரூபாய் பறித்து தப்பினர். மணிமங்கலம் போலீசார் விசாரித்து, அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், 25, லோகேஷ், 23, தயாநிதி, 26, அப்துல் கனி, 25, ரித்திக், 22, அருண், 20, ஆகிய ஆறு பேரையும், நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ