உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரவுடிக்கு வெட்டு எட்டு பேர் கும்பல் கைது

 ரவுடிக்கு வெட்டு எட்டு பேர் கும்பல் கைது

வியாசர்பாடி: வியாசர்பாடி, எஸ்.ஏ., காலனியை சேர்ந்தவர் சாய்ராம், 25; ரவுடி. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த இவர், நேற்று வியாசர்பாடி, சிவகாமி அம்மையார் காலனி வழியாக நடந்து சென்றார். அப்போது, எட்டு பேர் கும்பல் சாய்ராமை வழிமறித்து, அவரது மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்து, கத்தியால் வெட்டிவிட்டு தப்பியது. எம்.கே.பி., நகர் போலீசார் விசாரணையில், வியாசர்பாடி, எருக்கஞ்சேரியை சேர்ந்த வினோதினி, 29, அசோக்குமார், 20, தீபன், 19, வசந்த், 19, ரிஷி, 19, நித்திஷ்குமார், 19, மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் உட்பட எட்டு பேர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, எட்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில், கஞ்சா விற்றதில் ஏற்பட்ட முன்பகை காரணமாக சாய்ராமை வெட்டியது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ