உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோயம்பேடில் கஞ்சா விற்றவர் கைது

கோயம்பேடில் கஞ்சா விற்றவர் கைது

கோயம்பேடு, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, கோயம்பேடு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், சந்தேகத்திற்கு இடமாக பைக்கில் சென்ற நபரை மடக்கி, சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.விசாரணையில், அவர் நெற்குன்றம், ஆதாம் தெருவை சேர்ந்த சுப்பிரமணி, 54, என்பது தெரிந்தது.அவர், காலையில் அலுவலக வேலைக்கு செல்வது போல் டிப் டாப்பாக சென்று, பாக்கெட் மற்றும் ஸ்கூட்டி சீட்டுக்கு அடியில் கஞ்சா வைத்துக் கொண்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !