உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மதுரவாயல் கூவம் கரையோரம் மீண்டும் குப்பை குவிப்பு

மதுரவாயல் கூவம் கரையோரம் மீண்டும் குப்பை குவிப்பு

மதுரவாயல், மதுரவாயல் கூவம் ஆற்றின் கரையோரம் மீண்டும் குப்பை குவிக்கப்படுவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.சென்னை, மதுரவாயல் மேம்பாலம் கீழ், நொளம்பூர் சர்வீஸ் சாலை கூவம் கரையோரம், தனியார் கல்லுாரி அருகே குப்பை குவிக்கப்படுகிறது.சென்னைக்கு அருகில் உள்ள அடையாளம்பட்டு ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, இங்கு கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் மலை போல குவிந்துள்ள குப்பையை, சமூக விரோதிகள் சிலர் தீயிட்டுக் கொளுத்துவதால் கரும்புகை சூழ்ந்து, வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு அவதியடைந்தனர்.இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதும், குப்பை அகற்றப்பட்டது. தற்போது, அதே இடத்தில் மீண்டும் குப்பை கொட்டி எரிக்கப்படுகிறது. எனவே, கூவம் கரையோரம் குப்பை கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ