உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோத்சவத்தில் கருடசேவை 

பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோத்சவத்தில் கருடசேவை 

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று, கருடசேவை புறப்பாடு நடந்தது.இதை முன்னிட்டு, உற்சவர் பார்த்தசாரதி பெருமாளுக்கு நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. இதையடுத்து, கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். காலை 5:15 மணிக்கு கோபுரவாசல் தரிசனம் நடந்தது.பின், மாடவீதிகளை வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று, 'கோவிந்தா... கோவிந்தா' நாமத்தை உச்சரித்தனர். நேற்று நண்பகல் ஏகாந்த சேவையும், இரவு அம்ச வாகன புறப்பாடும் நடந்தது.விழாவின் முக்கிய நாளான, வரும் 19ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் பெருமாள் தேரில் எழுந்தருள்கிறார். காலை 7:00 மணிக்கு தேர் பக்தர்களால் வடம்பிடிக்கப்படுகிறது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை