உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கீதம் உணவக கிளை கோயம்பேடில் துவக்கம்

 கீதம் உணவக கிளை கோயம்பேடில் துவக்கம்

சென்னை: 'கீதம்' உணவகத்தின் 17வது கிளை, கோயம்பேடில் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் சைவ உணவுக்கு பெயர்பெற்ற 'கீதம்' உணவகம், நகரின் முக்கியமான 16 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இதன் 17வது கிளை, கோயம்பேடில் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. சென்னை ஹோட்டல் சங்கத்தின் கவுரவ தலைவர் ராம்தாஸ் ராவ், உணவகத்தை திறந்துவைத்தார். உணவக உரிமையாளர் முரளி, இயக்குநர் சுந்தர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தினமும் காலை 6:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 2:00 மணி வரை, உணவகம் செயல்படும். நள்ளிரவு டைனிங், விசேஷ கால சிறப்பு உணவுகள், இனிப்பு மற்றும் கார வகைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, கீதம் உணவக உரிமையாளர் முரளி கூறியதாவது: சென்னையின் மிக முக்கியமான போக்குவரத்து மற்றும் வணிக மையமான கோயம்பேடில், கீதம் கிளை திறக்கப்பட்டுள்ளது. இது, பயணியர் மற்றும் அலுவலகம் செல்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும். நடப்பாண்டில், தரம் மற்றும் சேவையில், எந்த சமரசமுமின்றி, சென்னை முழுதும் கீதம் உணவகத்தை கொண்டு சேர்ப்பதை இலக்காக வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை