அதிவேகமாக பைக் ஓட்டி தகராறு செய்தோர் கைது
சென்னை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், 55. கடந்த, 23ம் தேதி இரவு மின் வெட்டு ஏற்பட்டதால், வீட்டின் வெளியே நின்றிருந்தார்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 31, என்பவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும், நாகராஜை இடிப்பது போவும் ஓட்டி வந்துள்ளார்.இதை தட்டிக்கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், தன் ஆதரவாளர்களுடன் இரும்பு குழாய், மரக்கட்டையால் நாகராஜ், அவரது மனைவி உட்பட அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரை தாக்கினர். மேலும் நாகராஜின் மனைவியின் ஆடையை கிழித்தனர்.காயமடைந்த ஐந்து பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, பட்டினப்பாக்கம் போலீசாரிடம் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட சந்தோஷ்குமார், முகமது அலி, 36, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர்.இருவர் மீதும், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு உள்ளது.