உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது - கன்டெய்னரில் பைக் மோதி ஓட்டுநர் பலி 

பொது - கன்டெய்னரில் பைக் மோதி ஓட்டுநர் பலி 

ஆவடி, திருவள்ளூர் மாவட்டம், சிறுணியம், பன்னீர்வாக்கம் காலனியைச் சேர்ந்தவர் அருள், 36; தனியார் கல்லுாரி பேருந்து ஓட்டுனர்.இவர், நேற்று காலை, தனியார் கல்லுாரியில் வேலை முடிந்து, 'ஹோண்டா யுனிகார்ன்' பைக்கில், வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, வெள்ளச்சேரி அருகே, சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை