உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது// விநாயகர் சதுர்த்தி விடுமுறை 3,100 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

பொது// விநாயகர் சதுர்த்தி விடுமுறை 3,100 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

சென்னை, விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாளை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் இருந்து, 3,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து, விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் வெளியிட்ட அறிக்கை: விநாயகர் சதுர்த்தி, முகூர்த்தம், வார இறுதி நாட்கள் வருவதால், பயணியர் சென்னையில் இருந்து அதிகளவில் சொந்த ஊருக்கு சென்று வருவர். பயணியர் வசதிக்காக, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, துாத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு, இன்று 675 பேருந்துகள் உள்ளன. வரும் 28ம் தேதி 610 பேருந்துகளும், 29ல் 405 பேருந்துகளும், 30ல் 380 பேருந்துகளும் 31ல் 875 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதேபோல், கோயம்பேட்டில் இருந்து, பல்வேறு ஊர்களுக்கு 200 பேருந்துகளும், மாதாவரத்தில் இருந்து 24 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. பயணியர், www.tnstc.inமற்றும் அதன் செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !