காசிமேடு மீனவர் வலையில் சிக்கிய ராட்சத களவான் மீன்
காசிமேடு, காசிமேடு மீனவர் வலையில், 500 கிலோ ராட்சத களவான் மீன் சிக்கியது.காசிமேடைச் சேர்ந்த சுதாகர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் 10க்கும் மேற்பட்ட மீனவர்கள், கடந்த 22ம் தேதி ஆந்திரா மாநிலம் நெல்லுார், கிருஷ்ணபட்டினம் பகுதியில் ஆழ்கடலுக்குள் சென்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அதில், 500 கிலோ களவான் மீன், மீனவர் வலையில் சிக்கியது.பின், காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு மீனவர்கள், படகில் மீன் கொண்டு வந்தனர். இந்த மீனை, வியாபாரி வேலாயுதம் என்பவர், 35,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்து, அதை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக துாத்துக்குடி அனுப்பி வைத்தார்.இந்த வகை களவான் மீன்களை, சவுதி, கத்தார், சீனா, ஹாங்காங், லண்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள்,விரும்பி சாப்பிடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.