உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோல்ப் மைதான பணிக்கு தடையில்லை

கோல்ப் மைதான பணிக்கு தடையில்லை

சென்னை, சென்னை உயர் நீதிமன்றத்தில், மெட்ராஸ் ஜிம்கானா கிளப் தாக்கல் செய்த மனுவில், 'கோல்ப் மைதானத்தை, 147 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். 'அரசு பிறப்பித்த உத்தரவின்படி, ஐந்தாவது வாயில் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதற்குமுன் எங்களுக்கு நோட்டீஸ் தரவில்லை. அங்கு நடக்கும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 'ரேஸ் கிளப்புக்குதான் நிலம் குத்தகைக்கு வழங்கப்பட்டது. குத்தகை ரத்து செய்யப்பட்டு விட்டது. 'அந்த நிலத்தில் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என்று வழக்கு தொடர, ஜிம்கானா கிளப்புக்கு உரிமை இல்லை' என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, 'மனுதாரர் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளரோ, அசல் குத்தகைதாரரோ இல்லை. எனவே, இந்த மனுவில் எந்த தகுதியும் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என, நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை