டி.எம்.எஸ்.,சில் லிப்ட் பழுது அரசு அலுவலர்கள் அதிருப்தி
சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாக கட்டடத்தில் ஓராண்டாக, 'லிப்ட்' பழுதாகி உள்ளதால், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்., வளாகத்தில், மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகம், உணவு பாதுகாப்புத் துறை அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இந்த கட்டடத்தில், அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் அங்கு வரும் மக்களுக்கு பயன்படும் வகையில், 'லிப்ட்' வசதி உள்ளது. இந்த லிப்ட், ஓராண்டுக்கும் மேல் பழுதாகி உள்ளதால், இங்கு வரும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் படிக்கட்டில் ஏறி, பல மாடிகள் செல்ல வேண்டியுள்ளாதால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். முடங்கியுள்ள லிப்டை சரி செய்து, செயல்பட வைக்க வேண்டுமென, அரசு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.