உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு நிலம் ஆக்கிரமிப்பு: தி.மு.க., பிரமுகர் உட்பட 24 பேர் விதிமீறல் சிட்கோ நகரில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு தி.மு.க., பிரமுகர் உட்பட 24 பேர் விதிமீறல்

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: தி.மு.க., பிரமுகர் உட்பட 24 பேர் விதிமீறல் சிட்கோ நகரில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு தி.மு.க., பிரமுகர் உட்பட 24 பேர் விதிமீறல்

வில்லிவாக்கம், அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டில், வில்லிவாக்கம் சிட்கோ நகர் உள்ளது. இங்குள்ள, நான்காவது பிரதான சாலையில், அரசுக்குச் சொந்தமான வீட்டு வசதி வாரிய இடத்தை, சிலர் வீடுகள் மற்றும் கடைகள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர்.குறிப்பாக, இதே பகுதி தி.மு.க., வட்ட செயலர் சிட்கோ சேகர் என்பவர், அரசு இடத்தை ஆக்கிரமித்து தன் கடையை கட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சிட்கோ நகரில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சிட்கோ நகரை பொறுத்தவரை, பல ஆண்டுகளுக்கு முன், தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்காக, வீட்டுவசதி வாரியம் வீடுகள் ஒதுக்கீடு செய்தது.இதில், நான்காவது பிரதான சாலையில் பூங்கா மற்றும் சிறிய வணிக வளாகத்திற்காக இடம் ஒதுக்கப்பட்டது. அதில், வணிக வளாகத்திற்காக மட்டும், ஒரு கடைக்கு 335 சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டன.கடைக்கு ஒதுக்கிய இடத்தின் முன்பகுதியில், வாகனங்கள் நிறுத்தவும் தனியாக இடம் ஒதுக்கப்பட்டது.தற்போது, அந்த வாகனம் நிறுத்தும் இடத்தையும் சேர்த்து முன்னும் பின்னும், 2,000 சதுர அடிக்கு கடைகள் மற்றும் வீடுகளை கட்டி, விதிமீறல் நடந்துள்ளது.வட்ட செயலரின் கடைக்காக, அதிக அளவில் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, பகுதி கவுன்சிலரும், மண்டல குழுத் தலைவருமான ஜெயின் ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.அதே பகுதியில், இதுபோன்றே 24 வீடுகள் மற்றும் கடைகள், விதிமீறி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன.இதேபோல் அண்ணா நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், விதிமீறல் கட்டடங்கள் அதிகரித்து உள்ளன. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை