குரூப் 2, 2ஏ தேர்வுக்கான பயிற்சி வகுப்பு 5ல் துவக்கம்
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 'குரூப் 2, 2ஏ,' தேர்விற்கான பயிற்சி வகுப்புகள், வரும் 5 முதல் பிப்., 6ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் சேர விரும்பும் மாணவர்கள், https://forms.gle/d8jkeBkrqXAZe14K7 என்ற இணையதளத்தில், தங்களது விபரங்களை பதிவு செய்ய வேண்டும். வி பரங்களுக்கு, கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், நேரடியாக அல்லது gmail.comஎன்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித் துள்ளார்.