மேலும் செய்திகள்
ரயிலில் கஞ்சா கடத்தல்
08-Aug-2025
அண்ணா நகர்:கஞ்சா வழக்கில் கைதான இருவர் மீது, குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.சாலிகிராமம் பகுதியில் கஞ்சாவுடன் சுற்றிய யாசர் ஆபர்த், 33, என்பவரை, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசார், கடந்த 31ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, ஐந்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல, மற்றொரு கஞ்சா வழக்கில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த கிரைம் விக்கி, 26, என்பவரை கைது செய்திருந்தனர். இருவரும் தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதால், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்படி, நேற்று இருவரும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
08-Aug-2025