உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பல்கலை மண்டல கைப்பந்து குருநானக் கல்லுாரி முதலிடம்

பல்கலை மண்டல கைப்பந்து குருநானக் கல்லுாரி முதலிடம்

சென்னை: சென்னை பல்கலையின் 'ஏ' மண்டல கைப்பந்து போட்டியில், குருநானக் கல்லுாரி முதலிடத்தை பிடித்து அசத்தியது. சென்னை பல்கலையின் 'ஏ' மண்டல ஹேண்ட்பால் எனும் கைப்பந்து போட்டி, குருநானக் கல்லுாரி சார்பில், வேளச்சேரியில் நேற்று முன்தினம் நடந்தது. போட்டியில், 'ஏ' மண்டலத்திற்கு உட்பட்ட ஒன்பது கல்லுாரி அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதியில், காஞ்சிபுரம் பச்சையப்பா கல்லுாரி அணி, 16 - 13 என்ற புள்ளி கணக்கில் பெரி கல்லுாரியை தோற்கடித்தது. மற்றொரு அரையிறுதியில், குருநானக் கல்லுாரி, 23 - 17 புள்ளி என்ற கணக்கில் பிரசிடென்சி கல்லுாரியை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், குருநானக் மற்றும் காஞ்சிபுரம் பச்சையப்பா அணிகள் மோதின. இதில், 18 - 6 என்ற புள்ளி கணக்கில் குருநானக் அணி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது. மூன்றாம் இடத்தை பிரசிடென்சி கல்லுாரி அணி கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ