உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சொகுசு காராக மாற்றிய ஜிப்ஸி ஆவணம் இல்லாததால் பறிமுதல்

சொகுசு காராக மாற்றிய ஜிப்ஸி ஆவணம் இல்லாததால் பறிமுதல்

திருத்தணி, தமிழக - ஆந்திர மாநில எல்லை, திருத்தணி அடுத்த, பொன்பாடி பகுதியில், வட்டார போக்குவரத்து அலுவலர் சோதனைச்சாவடி இயங்கி வருகிறது.இங்கு, மோட்டார் வாகன ஆய்வாளர் சுமேஷ் நாராயணன், வாகனங்களை தணிக்கை செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது, சென்னையில் இருந்து, ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு படப்பிடிப்புக்காக சென்ற 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் போன்று வடிவமைக்கப்பட்ட வாகனத்தை நிறுத்தினர்.விசாரணையில் இந்த கார், நடிகர் ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான 'பிரதர்' படத்தில் பங்கேற்ற சொகுசு கார் என தெரிய வந்தது. தொடர்ந்து, வாகனத்தின் ஆவணங்களை சோதனை செய்ததில், 'ஜிப்ஸி' வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலரின் முறையான அனுமதியின்றி, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் போல வடிவமைப்பு செய்து, சினிமா சூட்டிங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்ததும் தெரிந்தது.மேலும் இந்த வாகனம், ஹரியானா மாநிலத்தில் பதிவு செய்து, தமிழகத்திற்கான வாகன வரி செலுத்தாமல் இயக்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து இந்த வாகனத்தை, ஆய்வாளர் பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை