மேலும் செய்திகள்
கிருஷ்ணராவ் கோப்பை கபடி காவேரி பள்ளி சாம்பியன்
1 minutes ago
இன்று இனிதாக (25/11/2025)
4 minutes ago
வங்கக்கடலில் சென்யார் புயல் உருவாக வாய்ப்பு: 11 மாவட்டங்களில் இன்று மழை
22 hour(s) ago | 1
சென்னை: வேப்பேரியில் நடக்கும் 'டி20' கிரிக்கெட் போட்டியில், விறுவிறுப்பான ஆட்டத்தில் ஹாரிங்டன் வாரியர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 'ப்ளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி' சார்பில் ஜெயலட்சுமி லீக் கம் நாக் அவுட் கிரிக்கெட் 'டி20' போட்டி வேப்பேரியில் நடக்கிறது. நிறுவனங்கள் மற்றும் அகாடமிகளைச் சேர்ந்த ஒன்பது அணிகள் பங் கேற்று மோதி வருகின்றனர். இதில், நேற்று முன்தினம் லீக் ஆட்டத்தில், ஹாரிங்டன் வாரியர்ஸ் மற்றும் அல்டிமேட் வாரியர்ஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஹாரிங்டன் வாரியர்ஸ் அணி, முதலில் பேட் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 2 விக்கெட் மட்டுமே இழந்து 243 ரன்கள் குவித்தது. அணிக்காக, சேவியர், 38 என்பவர், 49 பந்துகளில் 10 பவுண்டரிகள், 8 சிக்சர் பறக்க விட்டு, 105 ரன்கள் குவித்தார். அவருடன் பார்ட்னர்ஷிப் கொடுத்த சங்கர், 40, என்பவர் 92 ரன்கள் எடுத்தார். கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய அல்டிமேட் வாரியர்ஸ் அணியும், பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டது. ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட்டு களை இழந்ததால், தோல்வி வித்தியாசத்தை மட்டுமே, அல்டிமேட் வாரியர்ஸ் அணி யால் குறை க்க முடிந் தது. அந்த அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து, 32 ரன்கள் வித்தியாசத்தி ல் தோல்வி அடைந்தது. அணி வீரர் மெல்வின், 30 என்பவர், 33 பந்துகளில் 13 சிக்சர், 3 பவுண்டரிகள் என மிரட்டலாக 92 ரன்கள் அடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஹாரிங்டன் வாரியர்ஸ் பந்துவீச்சில் சகாவுதீன், 53 என்பவ ர், 35 ரன்கள் மட்டுமே வழங்கி, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
1 minutes ago
4 minutes ago
22 hour(s) ago | 1