உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆரோக்கிய வாழ்க்கை புற்றுநோயை கட்டுப்படுத்தும்

ஆரோக்கிய வாழ்க்கை புற்றுநோயை கட்டுப்படுத்தும்

சென்னை,உலக புற்றுநோய் தினமாக, பிப்., 4ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, எம்.ஜி.எம்., புற்றுநோய் மருத்துவமனை புற்றுநோயியல் சேவை துறை இயக்குனர் எம்.ஏ.ராஜா கூறியதாவது:தற்போதைய சூழலில், புற்றுநோய் பாதிப்பு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. உணவு முறை துவங்கி காற்று மாசுப்பாடு வரை, பல்வேறு காரணங்கள் உள்ளன. இவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன.இதை உண்மையிலேயே குறைப்பதற்கு, தனிநபர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது அவசியம். ஆரோக்கியமான வாழ்வு இல்லாமல், புற்றுநோயில் இருந்து மீள்வது என்பது சாத்தியமில்லாதது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை