உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடிகை ஸ்ரீதேவி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கிய விவகாரம் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

நடிகை ஸ்ரீதேவி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கிய விவகாரம் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடாக, 1.87 கோடி ரூபாயை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்துக்கு, நெடுஞ்சாலைத்துறை வழங்கியது குறித்து விசாரிக்க கோரிய மனுவை நான்கு வாரங்களில் பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவான்மியூர் முதல் அக்கரை வரை, கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்துவதற்கான நிலத்தை, மாநில அரசின் நெடுஞ்சாலை துறை கையகப்படுத்தியது. இதில், தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான 1,420 சதுர அடி நிலத்துக்கான இழப்பீடாக, 1.87 கோடி ரூபாயை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க கோரி, புழுதிவாக்கத்தைச் சேர்ந்த சிவகாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், 'குறிப்பிட்ட அந்த நிலம், தன் தாத்தாவுக்கு சொந்தமானது. தகுதி இல்லாத ஸ்ரீதேவி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக முறையாக விசாரணை நடத்த வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மனுதாரரின் கோரிக்கையை நான்கு வாரங்களில் பரீசிலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை