உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடுக்கான பங்களிப்பு தொகை தவணையில் செலுத்த வசதி

வீடுக்கான பங்களிப்பு தொகை தவணையில் செலுத்த வசதி

சென்னை, பிப். 20-தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், நேற்று வீடு ஒதுக்கீடு பெற்ற 712 பேருக்கு, பங்களிப்பு தொகை செலுத்த, எளிய மாத தவணை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மறுகட்டுமான திட்டத்தின் கீழ், திரு.வி.க., நகர் சந்திரயோகி சமாதி திட்டத்தில், 240; சத்தியவாணி முத்துநகர் திட்டத்தில், 438; எழும்பூர் ராதாகிருஷ்ணபுரம் திட்டத்தில், 168 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இவற்றை, கடந்த அக்., 29ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைதொடர்ந்து, மூன்று திட்டங்களிலும் சேர்த்து, 712 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.இதில், பயனாளிகள் பங்களிப்பாக சந்திரயோகி சமாதி திட்டத்தில், 83,000 ரூபாயை, மாதம், 500 ரூபாய் வீதம், 20 ஆண்டுகள் எளிய தவணையில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.ராதாகிருஷ்ணபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் திட்டத்தில், பயனாளிகள் பங்களிப்பு தொகை 1.50 லட்சம் ரூபாய். இதை மாதம், 625 ரூபாய் வீதம், 20 ஆண்டுகள் செலுத்த, வாரியம் வசதி செய்து கொடுத்துள்ளது. இது, பயனாளிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை