உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணி நிரந்தரம் கோரி தொடரும் உண்ணாவிரதம்

பணி நிரந்தரம் கோரி தொடரும் உண்ணாவிரதம்

அம்பத்துார்:பணி நிரந்தரம் செய்யக்கோரி, மூன்றாவது நாளாக துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மண்டலங்களில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், பணி நிரந்தரம் வேண்டும்; துாய்மை பணி தனியார் மயமாக்க கூடாது; தனியார் லாபம் சம்பாதிக்க வழிவகை செய்யக்கூடாது எனக் கூறி, கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய உறுதி அளித்ததை சுட்டிக்காட்டி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், தி.மு.க.,வின், 153வது தேர்தல் வாக்குறுதியாக, துாய்மை பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்படும் என கூறியதை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஐந்து பெண் துாய்மை பணியாளர்கள், மூன்றாவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி