உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மனைவி திட்டியதால் கணவன் தற்கொலை

மனைவி திட்டியதால் கணவன் தற்கொலை

வடபழநி,: வேலைக்கு செல்லாமல் மது அருந்துவது குறித்து மனைவி திட்டியதால், பிளம்பர் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனியை சேர்ந்தவர் சங்கர், 58; பிளம்பர். மது பழக்கத்திற்கு அடிமையான சங்கர் கடந்த ஒரு வாரமாக பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.வேலைக்கு செல்லாமல், மது அருந்தி வீட்டில் இருப்பது குறித்து அவரது மனைவி திட்டியுள்ளார். இதனால், மனவுளைச்சலில் இருந்த சங்கர் நேற்று முன்தினம் மாலை துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தகவல் அறிந்து வந்த வடபழநி போலீசார் அவரது உடலை மீட்டு கே.கே., நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை