உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையோர வியாபாரிகளுக்கு நாளை முதல் அடையாள அட்டை

சாலையோர வியாபாரிகளுக்கு நாளை முதல் அடையாள அட்டை

சென்னை:சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:சென்னையில், 35,588 சாலையோர வியாபாரிகள் உள்ளனர். சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக, புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 18,398 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.இதைதொடர்ந்து, நாளை முதல், பிப்., 15 வரை, அந்தந்த வார்டு அலுவலகங்களில், சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை இறுதிகட்டமாக வழங்கப்படும். தங்கள் பழைய அட்டையை ஒப்படைத்து, புதிய அடையாள அட்டையை வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை