உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி பாதிப்பு தொடர் மழை! நிலைமையை சமாளிக்க 2,000 ஊழியர்

பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி பாதிப்பு தொடர் மழை! நிலைமையை சமாளிக்க 2,000 ஊழியர்

சென்னை : தொடரும் மழையால் சென்னையின் பல பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் நான்கு நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை உள்ளதால், நிலைமை சிக்கலாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. தற்போதுள்ள பணியாளர்களை வைத்து சமாளிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ள மாநகராட்சி, மழைநீர் வடிகால் அடைப்பை சரி செய்யும் பணிக்கு, வார்டுக்கு 10 பேர் வீதம், 2,000 பேரை தற்காலிக பணியாளர்களாக களமிறக்கியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. பகலிலும் விட்டு விட்டு கன மழை பெய்தது.இதன் காரணமாக, சென்னையின் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. முக்கிய சாலைகளில் கூட, மழைநீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர் மழையால் தண்ணீர் வடியாமல், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, அடையாறு, திருவான்மியூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ஓ.எம்.ஆரில் கடுமையான நெரிசலால், 1 கி.மீ., துாரத்தை கடக்க, அரை மணி நேரம் வரை ஆனது. மேடவாக்கம் அடுத்த நன்மங்கலத்தில் முட்டிக்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது.ஆலந்துார் மண்டலம், பழவந்தாங்கல், பூந்தோட்டம் பகுதியிலும், ஆதம்பாக்கத்தில் சில தெருக்களிலும், மழைநீர் தேங்கியது. தாம்பரத்தில் இந்து மிஷன் மருத்துவமனை எதிரே இலக ரக வாகன சுரங்கப்பாதை, பெரம்பூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் புகுந்தது.மழையுடன் காற்றடித்ததால், அடையாறு, வேளச்சேரி பகுதியில் சில இடங்களில், மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. வலுவிழந்து நின்ற மரங்கள் வேரோடு சாய்ந்தன.வேளச்சேரி, தண்டீஸ்வரன் பிரதான சாலையில் புங்கை மரம் விழுந்ததால், 'சுசுகி - பலேனா' கார் சேதமடைந்தது. சில இடங்களில் தெருவிளக்குகளும் சேதமடைந்தன. இயந்திர நுழைவு பாதாள சாக்கடை மூடிகள் வழியாக, கழிவுநீர் வெளியேறி, மழைநீருடன் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.சென்னையின் பிரதான பகுதிகளான தி.நகர், வடபழனி, மணலி, கொளத்துார் தொடர்ச்சி ௪ம் பக்கம்உள்ளிட்ட பல இடங்களிலும் மழையால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் மழையில் சென்னையில் நீர் தேங்கி பாதிப்பு, போக்குவரத்து நெரிசல், மின் தடை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அதனால், பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை பணிகளில், மாநகராட்சி நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் கூறியதாவது:சென்னையில் மழைநீர் தேங்காதவாறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மழைக்கு மழைநீர் தேங்கிய மற்றும் தாழ்வான பகுதிகள் அனைத்தும், மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் வாயிலாக கண்காணிக்கப்படுகிறது.அதிக கனமழையின்போது, சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க, வார்டுக்கு 10 பணியாளர்கள் என, 2,000 பேர் வரை நியமித்து கொள்ள, உதவி பொறியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், ஐந்து நாட்கள் தற்காலிக முறையில் பணியாற்றுவர். மழைநீர் கால்வாய்க்கு செல்லும் வண்டல் வடிதொட்டிகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதேபோல், ஒவ்வொரு மழை பாதிப்பின்போது, தற்காலிக அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, மழை வெள்ள பாதிப்பை தடுக்கும் பணியில் ஈடுபடுவர்.தவிர, 1,223 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கான டீசல் போதியளவில் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.தாழ்வான பகுதிகளில் அவசர தேவைக்கு, 103 படகுகள் பயன்படுத்தப்படும். மேலும், மழை தொடர்பான, '1913' என்ற எண்ணில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை, பெரியளவில் மழை பாதிப்பு இருக்காது என்றாலும், தீவிர மழை பாதிப்பு வந்தாலும் சமாளிக்கும் வகையில், விழிப்புடன் பணியாற்றி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.24 மணி நேரமும் ஆவில் பாலகம்கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அம்பத்துார் பால்பண்ணை கேட், அண்ணா நகர் குட்நஸ் டவர் பூங்கா, மாதவரம் பால்பண்ணை, வண்ணாந்துரை, பெசன்ட் நகர், அண்ணாநகர் கிழக்கு, வசந்தம் காலனி, சோழிங்கநல்லுார் பால்பண்ணை், விருகம்பாக்கம், மயிலாப்பூர் சி.பி.ராமசாமி சாலை ஆகிய பாலகங்கள், 24 மணி நேரமும் இயங்கும். ஒருவருக்கு அதிகபட்சம் நான்கு பால் பாக்கெட் மட்டுமே வழங்கப்படும். பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி, பால் வினியோகம் செய்யப்படும்.- ஆவின் நிர்வாகம்

20 செ.மீ., மழைக்கு வாய்ப்பு

பள்ளிகளுக்கு விடுமுறைவங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழகத்தை நோக்கி நகர்கிறது. இன்று, புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்றும், நாளையும், 12 முதல் 20 செ.மீ., வரை மழை பெய்யக்கூடும் என, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மழைக்கு

500 இடங்களில் மழைநீர் தேக்கம்கடந்த அக்டோபரில் பெய்த மழையால், 500க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில், ஓரிரு நாட்கள் வரை மழைநீர் வடியாமல் தேங்கியது. சாலையோரங்களில் உள்ள மழைநீர் வண்டல் வடிதொட்டிகளில், 'பிளாஸ்டிக்' போன்ற குப்பை அடைப்பை ஏற்படுத்தியது தான், மழைநீர் தேங்க முக்கிய காரணமாக கூறப்பட்டது. இது தொடர்பாக நடந்த ஆய்வில், குப்பை அடைப்பு ஒரு காரணமாக இருந்தாலும், 95 இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு இல்லாமல் இருந்ததும் காரணம் என கண்டறியப்பட்டது. இதையடுத்து, மழைநீர் வடிகால் அடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் துார்வாரப்பட்டதுடன், இணைப்பும் வழங்கும் பணியும் நடந்து வருகிறது.

நேற்று காலை 8:30 மணி முதல்

மாலை 4:30 மணி வரை மழையளவுசென்னையில் மாவட்டத்தில் சராசரியாக, 4.1 செ.மீ.; செங்கல்பட்டில் 3.1 செ.மீ., மழை பெய்துள்ளது.பகுதி மழை அளவு செ.மீ.,கடப்பாக்கம் 11இடையாஞ்சாவடி 9 தாம்பரம் 8 அவ்வை நகர், பள்ளிக்கரணை, எண்ணுார் துறைமுகம் 7 தரமணி, புழல் 6 செங்குன்றம், திருவெள்ளவாயல் 5 மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் 4


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை