மேலும் செய்திகள்
ஸ்வர கணக்குகளில் வசுதா ரவி அபாரம்
3 minutes ago
பஸ்சில் இருந்த டிக்கெட் இயந்திரம் திருட்டு
28-Dec-2025
பெண்ணை சீண்டிய வாலிபர் கைது
28-Dec-2025
தாம்பரம் ரயில் நிலையத்தை, நாள்தோறும் இரண்டு லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். பொதுமக்களின் வசதிக்காக, 1 முதல் நான்கு நடைமேடைகளில் தினசரி தாம்பரம் - கடற்கரை இடையே 226, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 100 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மின்சார ரயில்களில், சிறுவர்கள் பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது. கூட்டமாக இருக்கும் ரயில்களில், பெற்றோருடன் ஏறும் சிறுவர் - சிறுமியர், கூட்டத்திற்கு மத்தியில் வித்தை காட்டி பிச்சை கேட்கின்றனர். இது, பயணியருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மின்சார ரயில்களில் இதுபோல் பிச்சை எடுக்கும் சிறுவர்களை கண்டறிந்து, அவர்களின் பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுத்து, அச்சிறுவர்களை படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 minutes ago
28-Dec-2025
28-Dec-2025