உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காசிமேடில் மீன் வரத்து அதிகரிப்பு

காசிமேடில் மீன் வரத்து அதிகரிப்பு

காசிமேடு:காசிமேடு துறைமுகத்தில், மீன்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோர் குவிவர். ஆனால், கடந்த சில வாரங்களாக, மீன்கள் வரத்து குறைவால், மீன் பிரியர்கள் ஏமாற்றமடைந்து வந்தனர்.இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதலே காசிமேடு மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. மீன்பிடிக்க சென்ற 60க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பின. கடந்த சில வாரங்களை ஒப்பிடுகையில், இந்த வாரம் பாறை, இறால் உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகளவில் இருந்தது. விலை சற்று உயர்ந்திருந்தாலும், பொதுமக்கள் பேரம் பேசி மீன்களை வாங்கி சென்றனர்.மீன் விலை நிலவரம்மீன் வகை கிலோ (ரூ.)வஞ்சிரம் 900 - 1,000வெள்ளை வவ்வால் 1,000கறுப்பு வவ்வால் 800 - 900சின்ன பாறை 150 - 200பெரிய பாறை 400 - 500சங்கரா 350 - 400சீலா 400 - 500நெத்திலி 200 - 300வாளை 150 - 200கனாங்கத்த 100 - 150நண்டு 150 - 200இறால் 250 - 300பிளவர் இறால் 700 - 800டைகர் இறால் 1,000


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ