இந்தியா - ரஷ்ய கலாசாரம் துணை துாதர் பெருமிதம்
சென்னை, சென்னையில் 22வது ரஷ்ய கலாசார விழா, தேனாம்பேட்டையில் நேற்று துவங்கியது. விழாவை, பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். விழாவின் துவக்கமாக, 17 ரஷ்ய நடன கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடந்தது.விழா குறித்து, சென்னையில் உள்ள ரஷ்ய துணை துாதர் வலேரி கோட்ஜேவ் கூறியதாவது:இந்தியா - ரஷ்யா இடையிலான நல்லுறவு சிறப்பாக உள்ளது. ராணுவத்திலும், இரு நாடுகளின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. அதேபோல் கல்வித் துறையிலும்; இங்குள்ள பல்கலைகளில் ரஷ்ய மாணவர்கள் பலர் கல்வி கற்கின்றனர். இந்திய, ரஷ்ய கலாசாரம் சிறந்தவை. கலாசார உறவுகள் எப்போதுமே சிறந்த இடத்தை பிடித்து இருக்கும்.கடந்த ஆண்டு இரு நாடுகள் இடையே, பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.