உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணியின் போது மாரடைப்பால் இன்ஸ்பெக்டர் மரணம்

பணியின் போது மாரடைப்பால் இன்ஸ்பெக்டர் மரணம்

கொரட்டூர்,திருமலை திருப்பதி குடை ஊர்வல பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர், மாரடைப்பால் மரணம் அடைந்தார். கொரட்டூர் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தவர் முத்துகுமார், 47. திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த இவர், ஆவடி காவலர் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்தார். நேற்று காலை வில்லிவாக்கத்தில் இருந்து ஆவடிக்கு, திருப்பதி குடை ஊர்வலம் சென்றது. இதற்காக, கொரட்டூர் காவல் நிலைய எல்லையில், முத்துக்குமார் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாடி மன்னுார்பேட்டை பகுதியில் ஊர்வலம் சென்றபோது, முத்துகுமார் திடீரென மயங்கி விழுந்தார். சக போலீசார் அவரை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி முத்துகுமார் இறந்தார். கடந்த ஆகஸ்ட் 31ல், சென்னையில் நடந்த பார்முலா கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கொளத்துார் உதவி கமிஷனர் சிவக்குமார் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், தற்போது இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணமடைந்தது, போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

ரூ. 25 லட்சம் நிவாரணம்

இதை அறிந்த முதல்வர் ஸ்டாலின், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரது குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை