மேலும் செய்திகள்
கல்லுாரி முதல்வர் 'சஸ்பெண்ட்'
31-May-2025
சென்னை,:துாய்மை பணியாளர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டிய, துாய்மை பணி பெண் ஆய்வாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், 47வது வார்டு, துாய்மை பணி ஆய்வாளராக ரமாதேவி, என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தனக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களிடம், மாதந்தோறும், 5,000 ரூபாய் மாமூல் பெற்று வந்துள்ளார். இதற்கிடையில், பணியாளர் ஒருவர், 3,500 ரூபாய் கொடுத்த நிலையில், அடுத்த மாதம் மீத தொகையையும் சேர்த்து தர வேண்டும் எனக் கேட்டு மிரட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.இது குறித்து, மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா விசாரணை மேற்கொண்டு, துாய்மை பணி ஆய்வாளரை 'சஸ்பெண்ட்' செய்ய உத்தரவிட்டார். அதன்படி, தண்டையார்பேட்டை மண்டல பொறுப்பு அலுவலர் திருநாவுக்கரசு, மாமூல் கேட்ட விவகாரத்தில் சிக்கிய ரமாதேவியை, 15 நாள் 'சஸ்பெண்ட்' செய்துள்ளார்.
31-May-2025