உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தஞ்சை வாலிபர் கொலை மூவரிடம் விசாரணை

தஞ்சை வாலிபர் கொலை மூவரிடம் விசாரணை

செங்குன்றம்:வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மூவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். செங்குன்றம் - சோத்துப்பாக்கம் சாலை 'அம்பிகா' தியேட்டர் அருகே, காசி விஸ்வநாதன் தெருவில் உள்ள காலி மனையில், நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இது குறித்து பகுதி மக்கள், செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசாரின் விசாரணையில், இறந்து கிடந்தது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி, 27, என்பதும், திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்ததும் தெரியவந்தது. இறந்தவர் தலை மற்றும் உடலில் காயங்கள் இருந்தன. இதனால், அவர் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மூவரிடம் விசாரித்து வருகின்றனர். நிம்மதி இல்லை இது குறித்து பகுதி மக்கள் கூறுகையில், 'அம்பிகா தியேட்டர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நள்ளிரவு வரை மது விற்கப்படுகிறது. தினமும் ஒரு அடிதடி சம்பவங்கள் நடக்கின்றன. போலீசாரும் கண்டுகொள்வதில்லை. 'குறிப்பாக, இரவு வேளைகளில் பாட்டில்களை வீசி, போதை கும்பல் ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால், நிம்மதி இழந்து வாழ்ந்து வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ