உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மயானத்தில் உணவருந்தி ஊழியர்களுக்கு அழைப்பிதழ்

மயானத்தில் உணவருந்தி ஊழியர்களுக்கு அழைப்பிதழ்

சென்னை, சென்னை ஓட்டேரி மயானத்தில் உணவருந்தி, அங்குள்ள பணியாளர்களுக்கு, ஹிந்து முன்னணி மாநிலச் செயலர் மனோகர் உள்ளிட்ட நிர்வாகிகள், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ்கள் வழங்கினர்.அயோத்தியில் கட்டப்பட்டு வரும் குழந்தை ராமர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக தமிழகம் முழுதும், ஆர்.எஸ்.எஸ்., - வி.ஹெச்.பி., - ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளும், பா.ஜ.,வை சேர்ந்தவர்களும் வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ஹிந்து முன்னணி மாநிலச் செயலர் மனோகர் தலைமையிலான சென்னை நிர்வாகிகள், சென்னை ஓட்டேரி மயானத்திற்கு சென்று, அங்கு பணியாற்றும் 34 பேருக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் மற்றும் அயோத்தியில் பூஜிக்கப்பட்ட அட்சதை வழங்கினர். அதை தொடர்ந்து, ஓட்டேரி மயான பணியாளர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். இது தொடர்பாக, மனோகர் கூறுகையில், ''அனாதை பிணங்களை அடக்கம் செய்வதை வழக்கமாக கொண்டவர் ஹிந்து முன்னணி நிர்வாகி வழக்கறிஞர் கார்த்தி. அதனால், ஓட்டேரி மயான பணியாளர்கள் அவருக்கு நண்பர்கள். அதனால், அவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க மயானம் சென்றோம். அப்போது மதிய நேரம் என்பதால் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ