பள்ளிகளுக்கான நீச்சல் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு
சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார், எஸ்.ஆர்.எம்., பல்கலையில், நிறுவனர் பிறந்த நாளை முன்னிட்டு, வரும் ஆக., 16ம் தேதி நீச்சல் போட்டிகள் நடக்க உள்ளன.பள்ளிகளுக்கு இடையிலான இப்போட்டியில், ஐந்து வயதுக்கு உட்பட்டோருக்கு, 25 மீ., ப்ரீ ஸ்டைல், 10 வயதுக்கு உட்பட்டோருக்கு, 25 மீ., பேக் ஸ்ட்ரோக், 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 50 மீ., ப்ரீ ஸ்டைல் ஆகிய பிரிவுகளில், போட்டிகள் நடக்கின்றன. போட்டியில், அனைத்து மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்கலாம். இம்மாதம் 31ம் தேதிக்குள், gmail.comஎன்ற இ - மெயில் முகவரியில் பதிவு செய்யலாம்.விபரங்களுக்கு, 97911 15678, 63664 74977, 73583 13320 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.