மேலும் செய்திகள்
தாம்பரம் - விழுப்புரம் ரயில் சேவையில் மாற்றம்
31-Oct-2025
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணி நடப்பதால், நான்கு விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்குவது மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி, 734.91 கோடி ரூபாயில் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி முதல் நடக்கிறது. பணிகளுக்கு ஏற்ப, சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்து, தாம்பரம், கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. குறிப்பாக, ராமேஸ்வரம் செல்லும் இரண்டு விரைவு ரயில்கள், உழவன், அனந்தபுரி விரைவு ரயில்கள், கடந்த சில மாதங்களாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. வரும் 11ம் தேதி முதல், மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பணிகள் நிறைவடையாததால், அடுத்த ஓரிரு வாரங்களுக்கு தாம்பரத்தில் இருந்து நீட்டித்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது, மத்திய சென்னை பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அசாம் - பெங்களூரு சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு பயணியர் தேவை கருதி, சிறப்பு ரயில்களின் சேவை நீட்டித்து இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நியூ தின்சுகியா - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வாராந்திர ரயில், வரும் 9ம் தேதி நீட்டித்து இயக்கப்படுகிறது. இதேபோல், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - நியூ தின்சுகியா வாராந்திர ரயில், வரும் 10ம் தேதியும் நீட்டித்து இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை பெரம்பூர் வழியாக இயக்கப்பட உள்ளன. தாம்பரம் - விழுப்புரம் ரயில்கள் ஒரு பகுதி ரத்து திண்டிவனம் ரயில்வே பணிமனையில் இன்றும், 8ம் தேதியும், மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தாம்பரம் - விழுப்புரம் காலை 9:45 மணி ரயில் ஒலக்கூர் வரை மட்டுமே இயக்கப்படும் விழுப்புரம் - கடற்கரை மதியம் 1:40 மணி ரயில் ஒலக்கூரில் இருந்து இயக்கப்படும்.
31-Oct-2025