உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை விபத்தில் ஐ.டி., ஊழியர் பலி

சாலை விபத்தில் ஐ.டி., ஊழியர் பலி

கொடுங்கையூர்புதுப்பேட்டை, காஞ்சிபுரம் பச்சையப்பன் முதல் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 32; ஐ.டி., நிறுவன ஊழியர்.பெங்களூரில் பணிபுரியும் இவர், விடுமுறையை முன்னிட்டு கடந்த வாரம் சென்னை வந்தார்.இவரது மனைவியின் தாய் வீடு, கொடுங்கையூர், சோலையம்மன் கோவில் தெருவில் உள்ளது. நேற்று மனைவியை பார்ப்பதற்காக, சரவணன் தன் புல்லட் இருசக்கர வாகனத்தில், கொடுங்கையூர், குப்பை கிடங்கு வழியாக சென்றார். அப்போது குப்பை கிடங்கு 3வது கேட் அருகில், சாலை தடுப்பு சுவர் மீது பைக் மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த சரவணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து விசாரித்த புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ