உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மது போதையில் கார் விபத்து ஐ.டி., ஊழியரிடம் விசாரணை

மது போதையில் கார் விபத்து ஐ.டி., ஊழியரிடம் விசாரணை

அண்ணா நகர்: மது போதையில், பெண் தோழியுடன் காரில் வேகமாக வந்த ஐ.டி., ஊழியர், 'ரிவேர்'சில் வந்த மற்றொரு காரின் மீது மோதியதில், சாலையிலே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கொளத்துார், ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்தவர் பிரசாந்த், 25; ஐ.டி., ஊழியர். இவர், தன் 'கியா' காரில், நேற்று இரவு 8:30 மணிக்கு, பெண் தோழியுடன், அண்ணா நகர் வழியாக வீட்டிற்கு சென்றார். ரவுண்டனாவில் இருந்து, மூன்றாவது அவென்யூ வழியாக கார் வேகமாக சென்றபோது, சாலையோரம் நின்ற 'சுசூகி' கார் ஒன்று, ரிவேர்சில் பின்னால் வந்துள்ளது. பிரசாந்த் காரை நிறுத்த முடியாமல், 'ரிவேர்'சில் வந்த கார் மீது மோதியதில், அவரது கார் சாலையிலேயே ஒரு பக்கமாக கவிழ்ந்தது. விபத்தில் இரு கார்களும் பலத்த சேதமடைந்தன. அண்ணா நகர் போக்குவரத்து புலானாய்வு பிரிவு போலீசார், காரை மீட்டனர். பிரசாந்த் மது போதையில் இருந்தது போலீசார் விசாரணையில் தெரிந்தது. போலீசர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி