ஜல்லி கொட்டி மூணு மாசமாச்சு... ரோடு எப்போ ஆபீசர்ஸ்?
திருநின்றவூர் நகராட்சி 26வது வார்டு, சரஸ்வதிநகர் விரிவு பகுதியில், பாரதியார் தெருவில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, கடந்த 30 ஆண்டுகளாக மழைநீர் வடிகால், சாக்கடை மற்றும் சாலை வசதி செய்து தரப்படவில்லை.இந்த நிலையில், 'தினமலர்' நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, மூன்று மாதத்திற்கு முன் தார்ச்சாலை அமைக்க ஜல்லி கொட்டப்பட்டது. ஆனால், அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பாலாஜி, திருநின்றவூர்.