உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் முதல் கிளையை துவக்குகிறது தங்கமயில் ஜூவல்லரி

சென்னையில் முதல் கிளையை துவக்குகிறது தங்கமயில் ஜூவல்லரி

சென்னை, :தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம், சென்னையின் முதல் கிளையை, தி.நகர் உஸ்மான் சாலையில், வரும் 23ம் தேதி துவங்க உள்ளது. துவக்க விழாவையொட்டி பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தங்க மயில் ஜுவல்லரி நிறுவன இணை இயக்குநர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறியதாவது:தங்க மயில் ஜூவல்லரி நிறுவனம், 33 ஆண்டுகளாக ஜுவல்லரி வர்த்தகத்தில் உள்ளது. கடந்த, 1991ல், மதுரையில் வெறும் 300 சதுர அடியில், எங்களின் முதல் கடை துவக்கப்பட்டது.தமிழகத்தின் தென் பகுதிகளில் 33 கடைகள் உட்பட, மாநிலம் முழுதும் 23 மாவட்டங்களில், 60 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நிறுவனமாக தங்க மயில் ஜூவல்லரி நிறுவனம் உள்ளது.எங்கள் நிறுவனத்துக்கு, 100 சதவீதம் ஹால்மார்க் தங்க நகைகளை விற்பனை செய்த முதல் நிறுவனம் பெருமையும் உண்டு. மொத்தம், 2,900 ஊழியர்கள், 30 லட்சம் வாடிக்கையாளர்களை நிறுவனம் வைத்துள்ளது.சென்னையில் முதன் முறையாக தங்கள் கிளையை, தி.நகர் உஸ்மான் சாலையில், வரும் 23ம் தேதி காலை துவக்குகிறோம்.திறப்பு விழாவை கொண்டாடும் வகையில், 10 கிராம் தங்கத்திற்கு அரை கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும்.இதுதவிர, 50,000 ரூபாய்க்கு மேல் நகை வாங்குவோருக்கு, பல்வேறு பரிசு பொருட்களும் வழங்கப்படும். சென்னை மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை