மேலும் செய்திகள்
ஆயிரம் மாணவியருக்கு இலவச மருத்துவ முகாம்
03-Sep-2025
சென்னை, கண் மருத்துவ மாணவர்களின் திறன்களை வளர்க்கும், 'கல்பவிருக் ஷா' மாநாடு, சென்னையில் துவங்கியது. டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய அறக்கட்டளை சார்பில், முதுநிலை கண் மருத்துவ மாணவ - மாணவியருக்கான, கல்பவிருக் ஷா 18வது மாநாடு, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா ஹோட்டலில் நேற்று துவங்கியது. இரண்டு நாள் நடக்கும் மாநாட்டை, ஆயிரம்விளக்கு தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலன் துவக்கி வைத்தார். மாநாட்டில், 300க்கும் மேற்பட்ட கண் டாக்டர்கள் பங்கேற்றனர். மாநாடு குறித்து, டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவக் குழுமத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி அஸ்வின் அகர்வால் கூறியதாவது: கண் மருத்துவ கல்வியில், மாறிவரும் தேவையை பூர்த்தி செய்ய, ஒவ்வொரு ஆண்டும், 'கல்பவிருக் ஷா' மாநாடு நடத்தப்படுகிறது. இதில், நேரடி பயிற்சி திட்டங்கள், கலந்துரையாடும் அமர்வுகள், நோயாளிகளுக்கான நேரடி சிகிச்சையுடன் விளக்க உரை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இதனால், மாணவர்கள் தங்களது திறன்களையும், அறிவையும் வளர்த்து கொள்வதுடன், எதிர்கால கண் மருத்துவ நிபுணர்களாகவும் உருவெடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
03-Sep-2025