உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அறுபடை வீடு முருகன் கோவிலில் காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் விஜயம்

அறுபடை வீடு முருகன் கோவிலில் காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் விஜயம்

சென்னை: அறுபடை வீடு முருகன் கோவிலில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம் செய்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பெசன்ட் நகரில் அறுபடை வீடு முருகன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி, காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று விஜயம் தந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து, அவர் பேசியதாவது: திருச்செந்துார், ராமேஸ்வரம் கோவில் போல், இந்த அறுபடை வீடு முருகன் கோவிலும், கடற்கரையை ஒட்டி உள்ளது. இந்த கோவில் காஞ்சி பெரியவருடைய ஆசியுடன், எம்.ஜி.ஆர்., காலத்தில் 31 கிரவுண்ட் இடம் கிடைக்கப்பெற்று, அதில் 21 கிரவுண்ட் இடத்தில் கருங்கல்லில் கோவில் கட்டமைத்து, சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். இதற்கு நிதி, நிர்வாகம் முக்கியம். அதையும் சிறப்பாக செய்கின்றனர். நம் நாட்டில், விஞ்ஞானம், பொருளாதாரம், மருத்துவம், வேலை வாய்ப்பு வளர வேண்டும் என்பது நமது தேவையாக இருந்தாலும், அடிப்படையில் நல்ல மனிதர்களை உருவாக்குவது முக்கியம். இதற்கு தெய்வ பக்தி தேவை. பாராயணம், தெய்வத்தின் குரலை படிப்பது, பிடி அரசி திட்டத்தை செயல்படுத்துவது, ஹோமம் நடத்துவது போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகளை, அடுத்த தலைமுறையிடம் எடுத்து செல்ல வேண்டும். கோவில்களை ஆன்மிக கல்வி நிலையங்களாக, தியாக மனப்பான்மையை வளர்க்க கூடிய இடமாக மாற்ற வேண்டும். மக்களிடம் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியமான சிந்தனை ஏற்பட கூடிய இடமாக, கோவில்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். திருவான்மியூர், அஷ்டலட்சுமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்காக நடைபெற்ற கணபதி ஹோமத்தில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை