உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கண்ணகி தெருவிற்கு கிடைத்தது மழைநீர் கால்வாய்

கண்ணகி தெருவிற்கு கிடைத்தது மழைநீர் கால்வாய்

மடிப்பாக்கம், பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம் கண்ணகி தெருவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. அதில், 5,000த்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.இத்தெருவின் மேற்கு பகுதி மேடாகவும், கிழக்கு பகுதி பள்ளமாகவும் உள்ளது. இங்குள்ள சாலையில் முறையான மழைநீர் வடிகால் வசதியும் ஏற்படுத்தப்படவில்லை.இதனால், மழைக்காலத்தில் சாலையில் தேங்கும் கழிவுநீர் கலந்த மழைநீரில் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர் நடந்து செல்ல சிரமப்பட்டனர். சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது.இது குறித்து, நம் நாளிதழ் படத்துடன் கூடிய விரிவான செய்தி வெளியிட்டது. அதன் நடவடிக்கையாக, கண்ணகி தெருவில் மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.மழைநீர், புழுதிவாக்கம் ஏரியில் சேரும் வகையில், இங்குள்ள பல தெருக்களிலும் கால்வாய் அமைக்கப்படுகிறது. அடுத்த மழைக்கு, இச்சாலையில் மழைநீர் தேங்காது என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்