உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கர்நாடக இசைப் போட்டி: விண்ணப்பங்கள் வரவேற்பு

கர்நாடக இசைப் போட்டி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை : இந்திய நுண்கலை சங்கம் சார்பில், 79 வது கர்நாடக இசை போட்டி, அடு த்த மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில், தி.நகர், பிரகாசம் சாலை, பாலமந்திர் வித்யாலயாவில் நடக்கிறது. தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், புரந்தரதாசர், அன்னமாச்சாரியார் உள்ளிட்டோரின் கீர்த்தனைகள், ஆண்டாள் பாசுரம், திருவருட்பா பாடல்கள் உள்ளிட்ட, 40 தலைப்புகளில், போட்டிகள் நடத்தப்பட உள்ளன.வாய்ப்பாட்டு, வயலின், வீணை, மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் நடத்தப்படும் இசை போட்டியில், ஒவ்வொரு தலைப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிப்பவர்களுக்கு, பணப் பரிசு வழங்கப்படும்.சபா, மேடை கச்சேரிகளில் பங்கேற்காத, 10 முதல் 20 வயதிற்குட்பட்டோர் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்புவோர், அடுத்த மாதம் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் கிடையாது.விண்ணப்பத்தை, www.theindianfineartssociety.comஇணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விவரங்களுக்கு, 2815 4360 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி