கே.சி.எஸ்.காசி நாடார் அணி கபடியில் வெற்றி
சென்னை, கல்லுாரிகளுக்கு இடையிலான கபடி போட்டியில் கே.சி.எஸ்., காசி நாடார் அணி 25 - 10 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. லயோலா கல்லுாரியின் உடற்கல்வித் துறை சார்பில் 91வது பெர்ட்ரம் நினைவு கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நுங்கம்பாக்கம் லயோலா கல்லுாரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டென்னிஸ், பால் பேட்மின்டன், வாலிபால் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. 26 கல்லுாரி அணிகள் பங்கு பெற்றுள்ளன. அந்த வகையில் ஆடவருக்கான கபடி முதல் போட்டியில் கே.சி.எஸ்., காசி நாடார் அணி, பிரசிடென்சி கல்லுாரி அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில் கே.சி.எஸ்., காசி நாடார் அணி 32 - 21 என்ற புள்ளியில் பிரசிடென்சி கல்லுாரி அணியை வீழ்த்தியது. தொடர்ந்து அடுத்த போட்டியில் கே.சி.எஸ்., காசி நாடார் அணி, எல்.ஓ.எச்.ஓ., கல்லுாரி அணியை எதிர்த்து மோதியது. இதிலும் அசத்திய கே.சி.எஸ்., காசி நாடார் அணி 25 - 10 என்ற புள்ளியில் எதிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.