மேலும் செய்திகள்
முருகனை போற்றிய காமேஸ்வரி நடனம்
04-Jan-2025
சிம்மவாகினியாக, லதாங்கி ராக பாடலுடன் கிருஷ்ண கான சபாவில், தன்னுடைய நடன நிகழ்ச்சியை ஆரம்பித்தார், பரதநாட்டிய கலைஞர் ஷோபனா. போர்க்களத்தில் அம்பிகை சண்டையிடும் காட்சியையும், அங்கு அசுரர்கள் அஞ்சி நடுங்குவதையும், சஞ்சாரியாக ஆக்கினார். அம்பாளின் வடிவழகையும், கண்ணழகையும் போற்ற, 'முரளிகான பிரியமானவளே ஓம்கார ரூபிணி' என்ற பாடலுக்கு நடனமிட்டார். தொடர்ந்து, திருவாரூர் தியாகராஜரை போற்றிடும் தஞ்சாவூரின், சங்கராபரண ராக பதவர்ணம் துவங்கியது.'சாமிக்கு சரிசமம் எவரோ' என ஆரம்பிக்க, 'என் தலைவனான ஈசனக்கு சமம் எவரேனும் உண்டா' எனும் வகையில், கண்களாலும், உடல்மொழியாலும் கேள்வி எழுப்பினார்.வர்ணத்தில் இடம்பெற்ற அனைத்து ஜதிகளையும், கரணங்களால் அலங்கரித்து அசைவுகளால் அற்புதமாக்க, கார்வை கணக்குகளின் தீர்மானங்கள் மகுடமாய் அமைந்தன.தொடர்ந்து பட்டாபிராமய்யரின் நாட்டை குறிஞ்சி பாடல் துவங்கியது. கிருஷ்ணர் நாயகனாக விளங்க, தன் மனதிற்கு பிடித்த பெண்ணின் மனம் கவர செய்யும் சண்டையும், வாதங்களும், சஞ்சாரிகளாக அமைந்தது. அவளின் மனம் பரிந்து, அனைத்தையும் சமாளித்து செல்லும் நாயகன் கிருஷ்ணனின் செயலாக, நாட்டியம் அமைந்திருந்தது.பின், செஞ்சுருட்டி ராக தில்லானாவில் பாய்ந்து பாய்ந்து கோர்வைகளை ஆடினார். சூர்தாஸரின் பஜனுடன், கோவிந்தனின் நாமம் அரங்கில் எதிரொலிக்க, ஓர் யானை கோவிந்தனை குளக்கரையில் இருக்கும் மலர்களை கொண்டு பூஜிக்கிறது.அத்தருணம் முதலை பிடியில் சிக்க கோவிந்தன் தன் சக்ராயுதத்தால் விமோசனம் தரும் நிகழ்வு, நிறைவு சஞ்சாரியாக அமைத்தது. கோவிந்தனின் நாமம் முழங்க, மங்களத்துடன் தன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.-மா.அன்புக்கரசி
04-Jan-2025